அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு: சிறப்பு நிலை ஆணை வழங்க ஜூன் 6-ல் சிறப்பு முகாம் - திருச்சி DEO அதிரடி உத்தரவு!
Type Here to Get Search Results !

அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு: சிறப்பு நிலை ஆணை வழங்க ஜூன் 6-ல் சிறப்பு முகாம் - திருச்சி DEO அதிரடி உத்தரவு!

0

அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு: சிறப்பு நிலை ஆணை வழங்க ஜூன் 6-ல் சிறப்பு முகாம் - திருச்சி DEO அதிரடி உத்தரவு


திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) அவர்கள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியான ஆசிரியர்களுக்குச் சிறப்பு நிலை (Special Grade) ஆணை வழங்குவதற்கான முக்கிய செயல்முறைகளை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் (இ.நிக) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின் முழு விவரங்கள் பின்வருமாறு:



அனுப்புநர்

 மாவட்டக் கல்வி அலுவலர் (இ.நிக), திருச்சிராப்பள்ளி.

பெறுநர்

 தலைமையாசிரியர்கள், அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், திருச்சி கல்வி மாவட்டம்.

ந.க. எண்

 3080/அ4/2026 (நாள்: .05.2026)

முகாம் நாள் & நேரம்

 06.06.2026 (சனிக்கிழமை), காலை 10.00 மணி

முகாம் நடைபெறும் இடம்

 சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி.




அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று, 01.06.2006 அன்று காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வரப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குச் சிறப்பு நிலை வழங்கி ஆணையிடுவதற்கான சிறப்பு முகாம் நடத்துதல் சார்பு.

trichy-govt-school-teachers-special-grade-order-camp-2026


கடந்த 27.06.2003 நாளிட்ட அரசாணை எண்.100-ன்படி, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு, பின்னர் 01.06.2006 முதல் காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வரப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அனைவரும் வரும் 01.06.2026 அன்று சிறப்பு நிலை (Special Grade) அடையவுள்ளனர்.


தகுதியான இந்த ஆசிரியர்களுக்கு 01.06.2026 முதலே சிறப்பு நிலை ஆணை வழங்குவதற்காக, திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் (CEO) தக்க அறிவுரையின்படி இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


உடனடி ஆணை விநியோகம்: 

இந்தச் சிறப்பு முகாமில், சிறப்பு நிலை ஆணைகள் அன்றைய தினமே (06.06.2026) ஆசிரியர்களுக்கு வழங்கப்பட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன


படிவங்களை பூர்த்தி செய்தல்

எனவே, இந்தச் செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மற்றும் படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.


பணிப்பதிவேடு (SR Book):

 தகுதியுள்ள சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களைப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மற்றும் பணிப்பதிவேட்டுடன் (Service Register) முகாமிற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முகாம் நடைபெறும் திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், முகாமிற்கு வரும் ஆசிரியர்களுக்குத் தகுந்த இடவசதி மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

மேலும் விபரங்களுக்கு கூடுதல் தகவல்கள்




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.